www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.08, 2016 (08/10/2016)
புதிய கரையான் இனங்கள் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது
Glyphotermes Chirahariitae பற்றி:
இந்த கரையான் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெப்ப மண்டல பசுமைமாறா காடுகளில் காணப்படுகிறது.
இந்த கரையான் இனங்கள் ஈரமான மரத்தில் வாழ்கின்ற வகையை சார்ந்தவை.
அவைகள் பிரத்தியேகமாக மரத்தில் வாசஸ்தலம் புரிபவைகள் மற்றும் மண்ணுடன் எந்த தொடர்பும் வைக்காமலே வாழக்கூடியவை.
குறிப்பு:
கரையான் உலர் மரம், ஈரமான மரம், மற்றும் பூமிக்கு அடியிலுள்ள மரங்கள் போன்றவற்றில் வாழக்கூடிய மூன்று வகையை சார்ந்தவை.
மகாராஷ்டிரா உதய் – உடன் சேர்ந்த 17-வது மாநிலம்
இந்திய அரசு, Ujwal DISCOM அஷ்யூரன்ஸ் யோஜனா (உதய்) கீழ் மகாராஷ்டிரா அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக கம்பெனி லிமிடெட்- உடன் (MSEDCL) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
உதய் பற்றி:
உதய் திட்டம், ஒரு நலிவுற்றிருக்கும் மின் விநியோக நிறுவனங்கள் – யை (distribution companies) (DISCOM) ஒரு மாநில செயல்பாட்டு திறனுக்கு கீழ் கொண்டு வர இலக்காக உள்ளது. மேலும் மாநில அரசுகள் அந்தந்த discoms ‘கடன் 75% வரை மேல் எடுத்து மற்றும் அரச உத்தரவாத பிணைப் பத்திரங்களை கொண்டு கடன் திரும்ப செலுத்தவும் உதவுகிறது.
உச்ச நீதிமன்றம், GM கடுகு வர்த்தகரீதியாக வெளியிட தடை விதித்துள்ளது
உச்ச நீதிமன்றம் 10 நாட்களுக்கு (GM) கடுகு பயிரை வணிக வெளியீடு செய்ய தடை விதித்துள்ளது.
மேலும், விவசாயத்திற்கு அப்பயிர்களை வெளியிடுவதற்கு முன் பொது கருத்து எடுக்க மைய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.