[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Dec. 01, 2016 (01/12/2016)
தலைப்பு : பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்
திரையரங்குகளில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் அனைத்து சினிமா அரங்குகளிலும் திரையிடல் முன் தேசிய கீதம் திரையிட உத்தரவிட்டுள்ளது மற்றும் அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் தேசிய கீதம் முடிவடையும் வரை “மரியாதை நிமித்தமாக நிற்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் தேசிய கீதம் பாடப்பட்டு கொண்டிருக்கும் போது திரையில் தேசிய கொடியினை காட்ட சினிமா அரங்குகளை கேட்டுக் கொண்டுள்ளது.
ஏன் அத்தகைய நடவடிக்கை?
1951 தேசிய விருதுகள் சட்டத்திற்கு அவமரியாதையை தடுக்கும் சட்டத்தின் கீழ், தேசிய கீதம் பாடப்படும் போது அதற்கு மரியாதை கொடுப்பது ஒவ்வொரு நபரின் கடமை என்று நீதிமன்றம் எடுத்துக்காட்டியுள்ளது.
மேலும் நீதிமன்றம் தேசிய கீதம் நாடக மேடைகளிலும் அல்லது எந்த பகுதிகளிலும் எந்த வகையான நிகழ்ச்சிகளிலும் அல்லது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை தடை செய்த்துள்ளது.
இது காட்சிகள் அல்லது தேசிய கீதத்தின் சுருக்கப்பட்ட பதிப்புகள் பயன்படுத்த தடை தடை செய்த்துள்ளது.
–
தலைப்பு : வரலாறு – செய்திகளில் தலைசிறந்த இடங்கள்
கியூபா நாட்டு நீக்ரோக்கள் ஆடும் நடனம் மற்றும் உகாண்டா இசை யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது
கியூபா நாட்டு நீக்ரோக்கள் ஆடும் நடனமான rumba சிற்றின்ப நடனம் மற்றும் பெல்ஜியம் பீர் கலாச்சாரம் வெற்றிகரமாக யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளது.
கலாச்சார பொக்கிஷங்கள் பட்டியல் 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டு முக்கியமாக அவற்றை பற்றி விழிப்புணர்வை அதிகரிக்க செய்யவும் சில சமயங்களில் யுனெஸ்கோ நிதி உதவி அளித்தும் அல்லது நாடுகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு தந்து அவற்றை பாதுகாக்க போராடி வருகிறது.
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்
இந்தியவியலாளர் விருது
இரண்டாவது ஐ.சி.சி.ஆர் (ICCR) ‘சிறப்புமிகு இந்தியவியலாளர்’ விருது, சீன மக்கள் குடியரசின் “பேராசிரியர் Yu Long Yu” – க்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூலம் வழங்கப்படுகிறது.
வெளிநாட்டில் தலைசிறந்த இந்தியாவியாளர்களை அங்கீகரிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் “இந்தியவியலாளர் விருது” ஐ.சி.சி.ஆர் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மெய்யியல் ஆய்விற்கு, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பங்களிப்பை செய்து, வரலாறு, கலை, கலாச்சாரம், மொழி, இலக்கியம், நாகரிகம், சமூகம் முதலானவற்றில் தலைசிறந்து விளங்குகிறார்களோ அவர்களுக்கு இவ்விருது கொடுக்கப்படுகிறது.
–
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
தனிம அட்டவணையில் 4 புதிய கூறுகள் இணைப்பு
Nihonium (NH), moscovium (MC), tennessine (TS), மற்றும் oganesson (OG) ஆகிய இந்த நான்கு கூறுகள் ஏழாவது வரிசையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
தூய மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம் (I.U.P.A.C) இந்த பெயர்களை உத்தியோகபூர்வமாக ஒப்புதல் வழங்கப்படுகின்றன என்று அறிவித்துள்ளது.
–
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்
தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் செய்வதில் நாட்டில் முன்னணி வகிக்கிறது
2008 ஆம் ஆண்டில் உடலிலிருந்து உடல் உறுப்பு தானம் செய்யும் திட்டம் தொடங்கியது முதல் இரண்டாவது ஆண்டாக, தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முன்னணி இருக்கிறது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, அதன் அதிகபட்ச எண்ணிக்கையிலான உறுப்பு நன்கொடை மற்றும் நாட்டின் அதிகபட்ச உறுப்பு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளதால் மாநிலத்திற்கு இந்த உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்
தமிழகத்திற்கு சூறாவளி “நாடா” எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையத்தினர் சூறாவளி “நாடா” பற்றி வடக்கு கடலோர தமிழ்நாடு பகுதிகளில் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, அரசாங்க பணியாளர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதன் தாக்கத்தினை சமாளிக்க அந்தந்த இடத்தில் பல்வேறு வழிமுறைகள் மேற்கொண்டுள்ளனர்.
தெற்காசிய நாடுகளை தொடர்ந்து சூறாவளி பெயரிடுவது படி, ஓமன் மூலம் இந்த சூறாவளிக்கு “நாடா” என பெயரிடப்பட்டது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current Affairs in Tamil – Dec and TNPSC Current Affairs in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil – Dec and TNPSC Current Affairs in English on your Inbox.
Read TNPSC Current Affairs in Tamil – Dec and TNPSC Current Affairs in English. Download daily TNPSC Current Affairs in Tamil – Dec for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs in Tamil – Dec as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]