[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – December TNPSC Current Affairs in Tamil – Dec. 03, 2016 (03/12/2016)
–
தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்
மகாராஷ்டிராவில் பணமில்லாத கிராமம்
மகாராஷ்டிரா மாநிலத்தில், தானே மாவட்டத்தின் DHASAI கிராமமானது முதல் பணமில்லா கிராமமாக மாறிவிட்டது.
இனிமேல் அனைத்து பண பரிமாற்றங்களும் இயந்திரங்கள் பயன்படுத்தி பணமில்லா முறை மூலம் செய்யப்படுகிறது.
NGO வின் “veer Savarkar Pratishthan” உடன் பேங்க் ஆப் பரோடா (BOB) இணைந்து இந்த கிராமத்தை முன்முயற்சியாக எடுத்து இதனை துவங்கியுள்ளது.
–
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்
சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியின் பிறந்த நாள்
பீகாரின் சரண் மாவட்டத்தின் Ziradei கிராமத்தில் பிறந்த சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியான “ராஜன் பாபு” என்று அழைக்கப்படும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் (Dr. Rajendra Prasad) அவர்களின் 131வது பிறந்த நாள் டிசம்பர் 3, 2016 ஆகும்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகவும் புகழ்பெற்ற சட்ட நிபுணராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஒரு திறமையான நிர்வாகியாகவும் இராஜ தந்திரம் கொண்டவராகவும் இருந்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு மனிதநேயமிக்க மனிதராவார்.
–
தலைப்பு : வரலாறு – கலாச்சார நிகழ்வுகள்
திருவிழாக்களின் விழா: ஹார்ன்பில் விழா (Hornbill Festival)
வட கிழக்கு இந்தியாவில் வாழும் நாகாலாந்து பழங்குடியினர் கோஹிமா கிராமத்தில் கொண்டாடும் “திருவிழாக்களின் விழா” என்றழைக்கப்படும் ஹார்ன்பில் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரம் கொண்டாடி மகிழ்கின்றனர்.
நாகாலாந்து பழங்குடியினர் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்க ஹார்ன்பில் திருவிழா (Hornbill Festival) கொண்டாடப்படுகிறது.
மேலும் பழங்குடி மக்கள் தங்கள் நடனங்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் மிகப்பெரிய மற்றும் வண்ணமயமான காட்டு பறவையான இந்திய ஹார்ன்பில் என்ற பறவையின் நினைவில் இத்திருவிழாவிற்கு இப்பெயரிடப்பட்டது.
–
தலைப்பு : வரலாறு – விருதுகள்
கொல்கத்தா – திட கழிவு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டதிற்காக விருதை வென்றது
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகளை மிகைத்திறமையாக கையாண்ட உலகின் மிகவும் எழுச்சியூட்டும் மற்றும் புதுமையான நகரங்களில் கொல்கத்தா C40 நகரங்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
“திண்மக் கழிவு” – களில் கொல்கத்தா தனது திட கழிவு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டதிற்காக (KSWMIP) இந்த ஆண்டு விருதை வென்றது.
கொல்கத்தா திட கழிவு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டமானது, திண்மக்கழிவுகளிலிருந்து 60லிருந்து 80% வரை கழிவுகளை அகற்றிய பின்னர் மேலும் கழிவுகள் அதன் பரிமாற்ற நிலையங்களில் நிகழும்.
இந்த திட்டம் கழிவுகளை ஒட்டுமொத்தமாக திறந்த வெளியினில் குவிப்பதையும் எரிப்பதனையும் ஒழிக்கும் நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் மீத்தேன் வாயு செறிவினை குறைக்கவும் வழிவகை செய்ய பட்டுள்ளது.
[/vc_column_text][vc_column_text]
For more December TNPSC Current Affairs in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily December TNPSC Current Affairs in Tamil and English on your Inbox.
Read December TNPSC Current Affairs in Tamil and English. Download daily December TNPSC Current Affairs in Tamil for TNPSC and Monthly compilation of December TNPSC Current Affairs in Tamil as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]