Site icon TNPSC Academy

TNPSC current affairs November in Tamil – Nov. 26, 2016

TNPSC current affairs November in Tamil

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC current affairs November in Tamil – Nov. 26, 2016 (26/11/2016)

Download as PDF

தலைப்பு : அரசியல் அறிவியல் – பொது நிர்வாகம்

DGP / IGP மாநாடு – 2016

சுதந்திர தினத்தை முன்னிட்டு DGP / IGP க்களின் மாநாடு ஹைதெராபாத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூலம் இந்த ஆண்டு துவங்கி வைக்கப்பட்டது.

இம்மாநாட்டில், தேசியம் எதிர்கொள்ளும் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதம் செய்யவும் மற்றும் அவைகளை சமாளிக்க பல்வேறு வழிமுறைகளை கண்டறியவும் உதவுகிறது.

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

அரசியலமைப்பு தினம் 2016

அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை பரப்பவும் மற்றும் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை புரிந்து கொள்ளவும் இந்தியாவில் Samvidhan diwas (அரசியலமைப்பு தினம்) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ம் தேதி கொண்டாடப்படுகிறது.

குறிப்பு :

இந்திய சட்டசபை, 1949-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்திய அரசியலமைப்பின் சட்டத்தினை ஏற்று அது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி அமலுக்கு வந்தது.

இந்திய அரசியலமைப்பின் தந்தை என அறியப்படுகின்ற Dr.B.R. அம்பேத்கர் அவர்களின் நினைவாக, இந்திய அரசு அரசியலமைப்பு தினம் நவம்பர் 26 என அறிவித்தது.

அரசியலமைப்பு தினம் ஏரிகள், காடுகள், ஆறுகள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை போன்ற இயற்கை சூழலுக்கு உட்பட்ட பகுதிகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மேலும் விலங்குகள் மீது இரக்கம் கொள்ளவும் ஊக்குவிக்கிறது.

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

தேசிய பால் தினம்

வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியன், அவர்களின் பிறந்த நாளை குறிக்கும் பொருட்டு தேசிய பால் தினம் இந்தியா முழுவதும் 26 நவம்பர் அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

2014 இல் முதன்முதலில் இந்திய பால் சங்கம் (IDA) மூலம் தேசிய பால் நாள் தொடங்கப்பட்டது.

ஐநா – வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 அன்று உலக பால் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர் வர்கீஸ் குரியன் பற்றி:

இந்தியாவின் மில்க் மேன் என அறியப்படும் டாக்டர் வர்கீஸ் குரியன், உலகின் மிகப்பெரிய விவசாய பால் வளர்ச்சி திட்டமான “operation flood “- னை உருவாக்கியவர் ஆவார்.

இந்த திட்டம் இந்தியாவை உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளராக மாற்ற உதவியது.

அவர் அமுல் கூட்டுறவு சங்கம் நிறுவ அவர் முக்கிய பங்காற்றினார்.

தலைப்பு : அரசியல் அறிவியல் – பொது நிர்வாகம், நலத்துறை சார்ந்த அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு

AirSewa போர்டல்

பொதுமக்களுக்கு ஒரு வசதியான இலவச விமான பயண அனுபவத்தை வழங்க Airsewa போர்டல் என்ற திட்டத்தினை சிவில் விமான சேவைகள் அமைச்சகம் தொடங்கியது.

முக்கிய குறிப்புகள் :

பயனாளிகள் விமானத்தின் நிலை சரிபார்க்கவும் மற்றும் விமான நிலையங்களிடையே திட்டமிடவும் தங்கள் விருப்பத்திற்கிணங்க உதவுகிறது.

விமானங்களை விமான எண் அல்லது விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானங்களையும் சேர்த்து தேடவும் இது உதவுகிறது.

விமான நிலைய தகவல்கள், அடிப்படை வானிலை தகவல்களையும் விமான நிலையத்தில் இருந்து அனைத்து விமான விவரங்கள் இணைக்கும் தகவல்களையும் வழங்குகிறது.

விமான சேவைகள் தொடர்பாக, விமான நிலைய தகவல் அடிப்படை விவரங்கள் மற்றும் தொடர்பு தகவல் முதலியன அடங்கும்.

சக்கர நாற்காலி, போக்குவரத்து / பார்க்கிங், ஓய்வெடுக்கும் அறை, wifi சேவைகள் போன்றவை இதிலடங்கும்.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC current affairs November in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC current affairs November in Tamil and English on your Inbox.

Read TNPSC current affairs November in Tamil and English. Download daily TNPSC current affairs November in Tamil for TNPSC and Monthly compilation of TNPSC current affairs November in Tamil as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version