
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs August 18, 2017 (18/08/2017)
தலைப்பு : தேசிய, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்
நவிகா சாகர் பரிக்ரமா (Navika Sagar Parikrama)
இந்திய கடற்படையின் பெண்கள் அதிகாரிகளின் குழு ஒன்று இந்தியாவில் கட்டப்பட்ட படகான INSV Tarini-ல் உலகம் முழுவதும் பயணம் செய்யும் திட்டமே நவிகா சாகர் பிகிரிமா திட்டம் ஆகும்.
முக்கிய குறிப்புகள்:
INSV தாரிணி ஆனது INSV ஹதேய்-ன் சகோதரி கப்பல் ஆகும்.
‘நரி சக்தி’ என்ற இந்திய அரசாங்கத்தின் திட்டத்தினை கருதும்போது இது கடற்படையின் கடல்சார் படகோட்ட நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டம் அத்தியாவசியமாக கருதப்படுகிறது.
‘நவிகா சாகர் பரிக்ரமா’ என்று பெயரிடப்பட்ட இந்த பயணம், நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் இந்திய கடற்படையினால் கடற்பயணம் செய்வதை ஊக்குவிக்கவும் இது நோக்கமாக கொண்டது.
_
தலைப்பு : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், சர்வதேச நிகழ்வுகள்
அமெரிக்காவும் இந்தியாவும் உலக தொழில் முனைவோர் உச்சிமாநாட்டை இணைந்து நடத்துகின்றன
உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாடு (GES) ஆனது நவம்பர் மாதம் ஹைதராபாத்- இந்தியாவில் நடைபெற இருக்கிறது.
இம்மாநாடு ஆனது GES 2017 ஒரு நல்ல சூழலை உருவாக்கும் அதாவது புதுமைகளை, குறிப்பாக பெண்களுக்கு, அவர்களின் கருத்துகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு இது உதவுகிறது.
இந்த ஆண்டு GES இன் கருப்பொருள்: “மகளிர்க்கு முதலிடம், அனைவருக்கும் நன்மை”, மேலும் இது பெண்கள் சிறப்பாக செயல்படும்போது நாடுகள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை சிறப்பித்துக் காட்டுகின்றன.
_
தலைப்பு : விளையாட்டு மற்றும் பதக்கங்கள்
லக்ஷயா சென் (Lakshya Sen), பல்கேரியா ஓபன் சர்வதேச தொடரில் வென்றார்
பல்கேரியாவில் உள்ள சோபியாவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் குரோஷியாவின் ஜொன்னிமிர் டர்கின்ஜாக் தோற்கடித்ததன் மூலம் இந்திய கூடைப்பந்து வீரர் லக்ஷியா சென், பல்கேரியா ஓபன் சர்வதேச தொடரின் பட்டத்தை வென்றார்.
அவர் உத்தரகாண்டிலிருந்து வந்தவர், மேலும் இவர் தனது 16 வது பிறந்தநாளை ஆகஸ்ட் 16, 2017 அன்று கொண்டாடியுள்ளார்.
_
தலைப்பு : பொது நிர்வாகம், மாநிலத்தின் விவரங்கள்
வட கோயல் நீர்த்தேக்க திட்டத்தை மத்திய அமைச்சரவை அங்கீகரித்து உள்ளது
ஜார்க்கண்ட் மற்றும் பீகாரில் உள்ள வட கோயல் நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மேலும் பலாமா புலிகள் சரணாலயம் மற்றும் பெட்லா தேசிய பூங்காவை பாதுகாக்கும் பொருட்டு அணையின் நீர்மட்டம் குறைந்த அளவில் கட்டுப்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்:
கங்கை நதியில் சேரும் சோனிக் நதியின் துணை நதியான வட கொயல் ஆற்றின் மீது இந்த திட்டம் அமைந்துள்ளது.
இந்த நீர்த்தேக்கத்தை ஜார்கண்டிலுள்ள பலாமா மற்றும் கர்வா மாவட்டங்களில் மிக பின்தங்கிய பழங்குடிப் பகுதிகளிலேயே அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் கட்டுமானம் 1972 ஆம் ஆண்டில் துவங்கி பீகார் வனத் துறை 1993ல் தடுத்து நிறுத்தியபோது வரை தொடர்ந்தது.
_
தலைப்பு : விளையாட்டு & விருதுகள்
உலக குள்ளர்கள் விளையாட்டு 2017
கனடாவில் டொரண்டோவில் நடந்த 7 வது உலக குள்ள விளையாட்டுகளில் இந்திய அணி உறுப்பினர்கள் 37 பதக்கங்களை வென்றுள்ளனர்.
முக்கிய குறிப்புகள்:
இந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா 15 தங்கம், 10 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
இப்போட்டியில் 24 நாடுகளில் இருந்து சுமார் 400 விளையாட்டு வீரர்கள் மொத்தம் பங்கேற்றனர்.
0 responses on "TNPSC Tamil Current Affairs August 18, 2017"