[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs Mar 01, 2017 (01/03/2017)
தலைப்பு: சமீபத்திய நிகழ்வுகள்
தேசிய அறிவியல் தினம்
தேசிய அறிவியல் தினம் இந்தியாவில் ஆண்டுதோறும் 28 பிப்ரவரி ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்திய இயற்பியலாளர், சர் சி வி ராமனின் ராமன் விளைவு கண்டுபிடிப்பினை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
2017 தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் : “ஊனமுற்ற நபர்களுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்”
சர் சி வி ராமன் பற்றி:
முன்னாள் சென்னை மாகாணமான தற்போதய தமிழ்நாட்டினில் 07 நவம்பர் 1888 அன்று சர் சந்திரசேகர வேங்கட ராமன் பிறந்தார்.
ஒரு இந்திய இயற்பியலாளரான அவர், 28 பிப்ரவரி 1928ல் ராமன் விளைவினை கண்டுபிடித்தார்.
1970 ஆம் ஆண்டு இறந்தார்.
சர் சி வி ராமன் அவர்களின் விருதுகள் மற்றும் மரியாதைகள்:
1930 ஆம் ஆண்டில், அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1941 ல் அவருக்கு பிராங்க்ளின் பதக்கம் வழங்கப்பட்டது. 1954 ல் அவர் பாரத ரத்னா பெற்றார்.
இராமன் விளைவு என்றால் என்ன?
பொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது.
சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது.
இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர்
_
தலைப்பு : அண்டை நாடுகளுடன் இருதரப்பு உறவு
Al Nagah II 2017
இந்திய இராணுவம் மற்றும் ஓமன் இராணுவம், தங்களது 2 வது இருதரப்பு பயிற்சியான “Al Nagah II”யை, பயங்கரவாத எதிர்ப்பினில் கவனம் செலுத்தும் பொருட்டு மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பின் குறிப்பு:
இந்தியக் கடற்படை மற்றும் ஓமன் கடற்படைகள் “நசீம் அல் பாஹர் (Naseem Al Bahr)” என்றழைக்கப்படுகின்ற இருதரப்பு கடல்சார் பயிற்சிகளை 1993 முதல் செய்து வருகின்றன.
_
தலைப்பு : புதிய நியமனங்கள் – யார் யார்?
பழங்குடியினர் தேசிய ஆணையத்தின் புதிய தலைவர் (NCST – National Commission of Scheduled Tribes)
நந்த குமார் சாய் NCSTன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
NCST பற்றி:
அரசியலமைப்பு (89th திருத்தம்) சட்டம் 2003 மூலம் சேர்க்கப்பட்ட NCST அரசியல் கட்டமைப்பு ஆர்டிகிள் 338A கீழ் உள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தேசிய ஆணையம் போன்று தனித்தனி ஆணையமாக உள்ளன.
முதல் கமிஷன் 2004 அன்று அமைக்கப்பட்டது.
முதல் தலைவர் குன்வர் சிங் ஆவார்.
நந்த குமார் சாய் முன் முந்தைய தலைவராக ராமேஷ்வர் ஓரோன் இருந்தார்.
நந்த குமார் சாய் பற்றி:
அவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மூத்த பழங்குடி தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Tamil Current Affairs Mar and in English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Tamil Current Affairs Mar and in English on your Inbox.
Read TNPSC Tamil Current Affairs Mar and in English. Download daily TNPSC Tamil Current Affairs Mar and in English.
Monthly compilation of TNPSC Tamil Current Affairs Mar and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/
[/vc_column_text][/vc_column][/vc_row]