Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs May 09, 2017

TNPSC Tamil Current Affairs May

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs May 09, 2017 (09/05/2017)

 

Download as PDF

தலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகள்

இந்திய ஜனாதிபதி செம்மொழி தமிழுக்கான குடியரசுத்தலைவர் விருதுகளை வழங்கினார்

மே 9, 2017 அன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில், 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளுக்கான “செம்மொழி தமிழுக்கான குடியரசுத்தலைவர் விருதுகளை” (Presidential Awards for Classical Tamil) இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்கள் வழங்கினார்.

செம்மொழி தமிழ் மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதைகளை கொடுத்து கவரவிக்கும் பொருட்டு புகழ்பெற்ற அறிஞர்களுக்கு செம்மொழி தமிழுக்கான குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த செம்மொழி தமிழுக்கான குடியரசுத்தலைவர் விருதுகள் இரண்டு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. அவையாவன:தொல்காப்பியர் விருது மற்றும் இளம் அறிஞர் விருது.

விருதுெபறுபவர்கள்:

2013-2014:

தொல்காப்பியர் விருது:

முனைவர் S.N.  கந்தசாமி அவர்கள், 2013-2014 ஆண்டிற்கான தொல்காப்பியர் விருதை பெற்றார்.

இளம் அறிஞர் விருது:

முனைவர். உல. பாலசுப்ரமணியன், முனைவர். கலை. செழியன், முனைவர் எஸ். ராஜலட்சுமி, முனைவர். டி. மகாலட்சுமி, முனைவர்.எஸ்.பீ. சாளாவாணிஸ்ரீ ஆகியோர்களுக்கு இளம் அறிஞர் விருதுகள் வழங்கப்பட்டன.

2014-2015:

தொல்காப்பியர் விருது:

முனைவர். ஏ. தக்ஷிணமூர்த்தி 2014-2015 ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது பெற்றார்.

இளம் அறிஞர் விருது:

முனைவர். ஏ. சதீஷ், முனைவர். முத்துசெல்வன், முனைவர். பி. திருஞானசம்பந்தம், முனைவர் எம். வசந்தகுமாரி, முனைவர். ஜி. சதிஷ் ஆகியோர்களுக்கு இளம் அறிஞர் விருதுகள் வழங்கப்பட்டது.

2015-2016:

தொல்காப்பியர் விருது:

கலாநிதி ஆர். கலைக்கோவன் 2015-2016 ஆண்டிற்கான தொல்காப்பிய விருது பெற்றார்.

இளம் அறிஞர் விருது:

முனைவர். எம். வனிதா, முனைவர். வி. பிரகாஷ், முனைவர். எஸ். பிரேம்குமார், முனைவர். ஜி. பாலாஜி, முனைவர் எம்.முனீஸ் மூர்த்தி ஆகியோர் இளம் அறிஞர் விருதுகளைப் பெற்றனர்.

தொல்காப்பியர் விருது பற்றி:

தொல்காப்பியர் விருது, என்பது செம்மொழி தமிழில் அறிஞர்களுக்கான ஒரு குடியரசுத்தலைவர் விருது ஆகும்.

தொல்காப்பியர் விருதுகள் 2005-2006 முதல் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றன.

தொல்காப்பியர் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்படும் விருதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவர் தேர்வு செய்யப் பெற்று இவ்விருது மூலம் கவுரவிக்கப்படுவார்கள்.

தொல்காப்பியம் எழுதிய பண்டைய தமிழ் எழுத்தாளர் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டது.

_

தலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகளில் நபர்கள்

நெதர்லாந்தின் இந்திய தூதராக வேணு ராஜமோனி (Venu Rajamony) நியமிக்கப்பட்டார்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் அலுவலரான IFS அதிகாரி வேணு ராஜமணி (Venu Rajamony) நெதர்லாந்தின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

நெதர்லாந்தின் இராஜ்ஜியத்திற்கு இந்தியாவின் அடுத்த தூதுவராக வேணு ராஜமணி நியமிக்கப்பட்டுள்ளார்

அவரை பற்றி:

ஒரு பத்திரிகையாளரான திரு ராஜமணி, 1986 அணியின் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி ஆவார்.

இவர் ஆகஸ்ட் 2012 முதல் ராஷ்டிரபதி பவனில் பணியாற்றி வந்தார்.

_

தலைப்பு : நிகழ்வுகள், விளையாட்டு, உலக அமைப்புகள்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் லோகோ மற்றும் சின்னம் வெளியிடப்பட்டது

22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான லோகோ மற்றும் சின்னத்தினை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் (Naveen Patnaik) வெளியிட்டுள்ளார்.

புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் ஜூலை 6 முதல் 9, 2017 வரை இந்த விளையாட்டுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்புகள்:

இவ்விளையாட்டின் சின்னமாக ஆலிவ் ரிட்லி ஆமைகள் சித்தரிக்கப்படுகிறது.

இவைகள், ஒடிசாவின் கஹர்மாதா கடற்கரையில் (Gahirmatha beach) காணப்படும் ஒரு அருகிவரும் இனங்கள் ஆகும்.

இந்த விளையாட்டில் 45 நாடுகளைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 42 நிகழ்வுகளில் பங்கேற்க இருக்கிறார்கள்.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version