[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs May 30, 2017 (30/05/2017)
தலைப்பு : பொது நிர்வாகம், அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
அரசாங்கம் தாயகப் பயன் திட்டத்தை மறுபெயரிட்டது
மத்திய அரசு “Matritva Sahyog Yojana – மகப்பேறு ஆதரவு திட்டம்“-த்தினை “பிரதான் மந்திரி மத்ரிவ வந்தனா யோஜனா (PMMVY) – பிரதம மந்திரி மகப்பேறு வந்தன திட்டம்“ என மறுபெயரிட்டுள்ளது.
இந்த திட்டம் ஆனது, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் பிரசவத்திற்கு ரூ. 6000 கொடுக்க பயன்படுத்தப்படுகிறது.
முக்கிய குறிப்புகள்:
இந்த திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது இரண்டாவது முறையாகும்.
இது 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது இது “இந்திரா காந்தி மகப்பேறு ஆதரவு திட்டம்“ என்று அழைக்கப்பட்டது.
தலைப்பு : பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள்
ஆழ்கடல் பணி (Deep Ocean Mission) – ஜனவரி 2018
இந்திய அரசின் புவியியல் அமைச்சகத்தின் மூலம் ஜனவரி 2018ல் ‘ஆழ்கடல் பணி’ அனைத்துமே துவக்கப்பட உள்ளது.
இது கடல் ஆராய்ச்சி துறையில் இந்தியாவின் நிலைப்பாட்டை மேம்படுத்தும்.
முக்கிய குறிப்புகள்:
ஆழ்ந்த கடல் பகுதிகளில் கனிம ஆராய்ச்சிக்காக கடல் பகுதிகளை ஒதிக்கியதில் முன்னோடியாக உலகிலேயே முதல் நாடாக இந்தியா உள்ளது.
அதாவது 1987 ஆம் ஆண்டு மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் பல உலோக பகுதிகள் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டன.
CSIR-NIO விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட விரிவான ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள், உலக அமைப்புகள், முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள்
ஐ.நா. அமைதிகாக்கும் சர்வதேச நாள் – மே 29
மே 29யை ஐ.நா. அமைதிகாக்கும் சர்வதேச நாளாக அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் உயிரிழந்த பல்வேறு அதிகாரிகளுக்கும் மேலும் இந்த அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் மேலும் அவர்கள் தொடர்ந்து பணியாற்றவும் அவர்களின் உயர் மட்ட தொழில், அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் ஆகியவற்றினை நினைவு கூறும் பொருட்டு இத்தினம் அனுசரிக்க்கப்படுகிறது.
ஐ.நா. அமைதிகாக்கும் 2017 சர்வதேச தினத்திற்கான கருப்பொருள்:”உலகில் சமாதானத்தில் முதலீடு”.
ஐ.நா அமைதிகாப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்பு 1948 இல் உருவாக்கப்பட்டது.
இது 1948 அரபு-இஸ்ரேலிய போரின்போது போர்நிறுத்தத்தை கண்காணிக்கவும் பராமரிக்கவும் உதவிய ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வை அமைப்பு (UNTSO) -ன் நிறுவதலுக்கு உதவியதே இதன் முதல் பணி .
ஐ.நா. அமைதிகாக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள்:
அனைத்து கட்சிகளின் ஒப்புதல், சுய பாதுகாப்பு தவிர பாரபட்சமற்ற மற்றும் படைகளை பயன்படுத்தப்படாதது மற்றும் கட்டளை பாதுகாப்பு.
1988 ல் ஐ.நா. அமைதிகாக்கும் படை நோபல் அமைதிக்கான பரிசு பெற்றது.
_
தலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள், பொது நிர்வாகம்
கோவா மாநில அரசு நாள்: 30 மே
மே மாதம் 30 ஆம் தேதி கோவா மாநிலத்தின் மாநில தினம் அனுசரிக்கப்படுகிறது.
1987 ஆம் ஆண்டு கோவா ஒரு யூனியன் பிரதேசமாக இருப்பது முடிவடைந்து இந்தியாவின் 25 வது மாநிலமாக மாறியது.
முக்கிய குறிப்புகள்:
கோவா டிசம்பர் 1961 ல் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற ஒரே வாக்கெடுப்பாக 1967 ல் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
கோவா, டையு மற்றும் டாமன் தனித்துவமான இருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு யூனியன் பிரதேசத்தின் நிலையுடன் இருந்தது.
பிறகு இந்த நாளில், 1987 ஆம் ஆண்டில், கோவா ஒரு யூனியன் பிரதேசமாக இருப்பது முடிவடைந்து இந்திய ஒன்றியத்தின் 25 வது மாநிலமாக மாறியது.
தலைப்பு : பொது நிர்வாகம், பொது விழிப்புணர்வு, சமீபத்திய நிகழ்வுகள்
தர்வாஸா பேண்ட் (Darwaza Band) – திறந்த வெளியில் மலம் கழிப்பதை நிறுத்துவதற்காக இலவச தேசிய பிரச்சாரம்
இந்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான மத்திய அமைச்சகம், நாட்டின் கிராமங்கள் முழுவதும் கழிவறை பயன்பாடு மற்றும் வெளியில் மலம் கழிப்பதை நிறுத்த ஊக்குவிக்கவும் ‘தர்வாஸா பேண்ட்’ என்ற தலைப்பில் ஒரு புதிய பிரச்சாரத்தை துவங்கியது.
முக்கிய குறிப்புகள்:
இந்த பிரச்சாரம் ஸ்ரீ அமிதாபச்சின் தலைமையில் நடைபெற்றது.
இதில் பல கழிப்பறை தொழில்நுட்பங்களைக் காண்பிக்கும் ஒரு கண்காட்சி வைக்கப்பட்டது.
‘தர்வாஸா பேண்ட்’ பிரச்சாரம் உலக வங்கியால் ஆதரிக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் நிகழ்ச்சிக்கு பிறகு உடனடியாக நாடு முழுவதும் பரப்ப உதவுகிறது.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கிராம பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் கிராமங்களில் இந்த பிரச்சினையை எழுப்பவும், தலைமை எடுத்து பார்த்துக்கொள்ளவும் ஊக்குவிக்கும் வகையில் நடிகை அனுஷ்கா ஷர்மா இதில் பங்கேற்றார்.
[/vc_column_text][/vc_column][/vc_row]