Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs October 10, 2017

TNPSC Tamil Current Affairs October

www.tnpsc.academy TNPSC Tamil Current Affairs October 10, 2017 (10/10/2017)

 

Download as PDF

தலைப்பு : விருதுகள் மற்றும் மரியாதைகள், செய்திகளில் நபர்கள்

லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது 2017

இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்கள், 2017 ஆம் ஆண்டிற்கான பொது நிர்வாகம், கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகத்தில் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்காக லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது வழங்கினார்.

இவ்விருது ராஷ்டிரபதி பவனில் டாக்டர் பிந்தேஸ்வர் பதக் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பிந்தேஸ்வர் பதக் (Bindeshwar Pathak) பற்றி:

பிந்தேஸ்வர் பதக் ஒரு இந்திய சமூகவியலாளர் ஆவார்.

மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அல்லாத வழக்கமான ஆற்றல், கழிவு மேலாண்மை மற்றும் சமூக சீர்திருத்தங்களை கல்வி மூலம் ஊக்குவிப்பதற்காக செயல்படும் இந்தியாவின் சமூக சேவை நிறுவனமான சுலாப் சர்வதேச நிறுவனத்தை அவர் நிறுவியவர்.

இந்த அமைப்பில் தனது பணிக்கு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

_

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

உலக மனநல நாள்

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது.

இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.

இந்த 2017ம் ஆண்டின் கருப்பொருள் : பணியிடங்களில் மனநலம்.

_

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

இந்தியாவின் ஜனாதிபதி 2017 ம் ஆண்டின் இந்தியாவின் நீர் வாரத்தினை துவக்கிவைத்தார்

இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்திய நீர் வாரத்தினை 2017 அக்டோபர் 10 முதல் 14 தேதி வரை, புது தில்லி விங்யன் பவனில் துவங்கி வைத்தார்.

இந்தியா நீர் வாரம் 2017:

இந்தியா நீர் வாரத்தின் 2017 ஆம் ஆண்டின் கருப்பொருள் : உள்ளார்நத வளர்சிக்கு நீர் மற்றும் ஆற்றல்.

இந்த இந்தியா நீர் வாரம் 2017 ஆனது, உலக அளவிலான முன்னோடிகள், அரசியல்வாதிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர்கள் பரஸ்பர நன்மைக்கான நீர் வளங்களில் தங்கள் கருத்துக்களை விவாதிக்க இது ஒரு தளமாக உள்ளது.

_

தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்

யோகாவின் 3 வது சர்வதேச மாநாடு

துணை ஜனாதிபதி, திரு.எம்.வேங்கியா நாயுடு அவர்கள், புது தில்லி சானகியாகபுரியின் ப்ரவாசி பாரதீய கேந்திராவில் இருநாட்களுக்கு ‘யோகாவின் சர்வதேச மாநாடு’ ஒன்றினை துவங்கி வைத்தார்.

முக்கிய குறிப்புகள்:

ஆயுஷ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட யோகாவிற்கான 3 வது சர்வதேச மாநாடு இதுவாகும்.

69 நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் 500 பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

யோகா பற்றிய இந்த சர்வதேச மாநாட்டிற்கான கருப்பொருள் :ஆரோக்கியத்திற்கான யோகா‘.

_

தலைப்பு : புதிய நியமனங்கள், செய்திகள் உள்ள நபர்கள், சமீபத்திய நிகழ்வுகள்

மொனாகோவின் இந்தியாவின் அடுத்த தூதுவராக வினய் மோகன் க்வாத்ரா நியமிக்கப்பட்டார்

வினய் மோகன் க்வாட்ரா மொனாக்கோவின் தலைநகரத்திற்கு இந்தியாவின் அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டார்.

வினய் மோகன் க்வாட்ரா 1988 ஆம் ஆண்டின் இந்திய வெளிநாட்டு சேவை (IFS) அதிகாரி ஆவார்.

அவர் தற்போது பிரான்ஸ் நாட்டின் இந்திய தூதராக உள்ளார்.

அதே சமயத்தில் மொனாக்கோவின் தலைநகரத்திற்கு இந்தியாவின் அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version