
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.25, 2016 (25/09/2016)
உலகளாவிய மாஸ்டர்கார்டு இடங்களின் பட்டியலில் இந்திய நகரங்கள்
மும்பை, சென்னை, புது தில்லி, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய நகரங்கள் முறையே 27, 30, 48, 62, 91 வது இடங்களை உலகளாவிய மாஸ்டர்கார்டு இடங்களின் பட்டியலில் பெற்றுள்ளன.
இந்த தரவரிசை பட்டியல் உலகம் முழுவதும் உள்ள 132 அதிகமா சுற்றுலா செல்லும் நகரங்களில் இருந்து 100 முன்னிலை நகரங்களை பட்டியலிடுகிறது.
தரவரிசை பற்றி:
இந்த தரவரிசை பட்டியல், அதிகமாக சுற்றுலா அல்லது பார்வையிடும் நகரங்களில் இருந்து அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் பொது மக்கள் தங்களின் பயணம் மற்றும் அதற்கான செலவிட்டு தொகை போன்றவற்றை வைத்து இப்பட்டியல் உருவாக்கப்படுகிறது.
மேலும் இத்தரவரிசை சர்வதேச இரவில் அவர்களின் எல்லை தாண்டிய மொத்த பார்வையாளர் வருகையின் எண்ணிக்கை, பார்வையாளர் மற்றும் பயணிகள் வளர்ச்சிக்காக செலவிடும் பணியிலிருந்து பட்டியலிடப்படுகிறது.
ஐக்கிய கண்டங்களின் அழகி போட்டியில் இந்தியா இரண்டாவது ரன்னர் அப்
இந்தியாவின் எலக்ட்ரிகல் என்ஜினீயரான லோபாமுத்ரா ராவ் எக்குவடோரில் உள்ள குய்யாகியில் நடைப்பெற்ற 2016 ஐக்கிய கண்டங்களின் அழகுப்போட்டியில் இரண்டாவது ரன்னர் அப்– ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்த போட்டியில் “சிறந்த தேசிய ஆடைவடிவமைப்பு” விருதையும் மூன்றாவது முறையாக பெற்றார்.
அவரைப்பற்றி:
மஹாராஷ்டிராவில் பிறந்து நாக்பூரில் வளர்ந்த இவர் பெமினா அழகுப்போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளார்.
காது கேளாதோர்க்கான சர்வதேச வாரம்
காது கேளாதோர்க்கான உலகக் கூட்டமைப்பு (WFD), ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரின் கடைசி வாரம் காது கேளாதோர் சமூகத்தின் சர்வதேச வாரம் கொண்டாடப்படுகிறது மற்றும் செப்டம்பரின் கடந்த ஞாயிறு உலக காது கேளாதோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
குறிப்பு:
இந்த வாரம், உலகம் முழுவதும் காதுகேளாதோர் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் பண்பாட்டிலுள்ள அடையாள மொழிகளை பற்றியும் கொண்டாடபடுகிறது.
முகம்மது அலிக்கு முதல் ஜெஸ்ஸி ஓவென்ஸ் (Jesse Owens) ஸ்பிரிட் விருது
மறைந்த முகம்மது அலிக்கு முதல் ஜெஸ்ஸி ஓவென்ஸ் ஸ்பிரிட் விருது 2016 அவரது நான்கு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றிக்காக வழங்கப்பட உள்ளது.
இந்த விருது பற்றி:
1936 -ல் பெர்லினில் நடைப்பெற்ற ஒலிம்பிக்கில் ஓவன்ஸ் (Jesse Owens) அவர்கள் நான்கு தங்க பதக்கம் பெற்றதற்கான 80 வது ஆண்டு நினைவாக, இந்த ஆண்டு இந்த விருது விழா தொடங்கப்பட்டது.
சமூகத்தில் ஒரு உத்வேகமாக பணியாற்றிய நபர்களை அங்கீகரிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட இருக்கிறது.
உயிரிய பொருளாதார தேசிய பணி
ஷில்லாங் – இல் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரவையின் கீழ் உள்ள உயிரி வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி நிறுவனம் (Institute of Bio-resources & Sustainable Development) (IBSD), உயிரிய பொருளாதார தேசிய பணியை தொடங்கியது.
இந்த பணியை பற்றி:
உயிர் வளங்களை பயன்படுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை அதிகரிக்க இந்த தேசிய பணியின் இலக்காக உள்ளது.
இந்த பணி அறிவு சார்ந்த அணுகுமுறைகள் மூலம் புதுப்பிக்கத்தக்க உயிரியல் ஆதாரங்களின் நிலையான பயன்பாடுகளில் கவனம் செலுத்துகிறது.
வழிமுறைகள் மற்றும் உயிரிய செயல்முறைகளை புரிந்து மற்றும் அச்செயல்முறைகளை தொழில்துறையை மேம்படுத்த உபயோகித்து பொருளாதாரத்தை வளர்ப்பது உயிரிய பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது.
0 responses on "TNPSC Current Affairs in Tamil – Sep.25, 2016 (25/09/2016)"